Threeஇடியட்ஸுக்கு தயாராகும் விஜய்

ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் நடிக்க முடிவு செய்திருகிறாராம் விஜய்.

காவல்காரன் ஏற்கெனவே 60% முடிந்துவிட்ட நிலையில், ஜூன் முதல் வாரம் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக இயக்குனர் ஜெயம்ராஜா அலுவல வட்டாரம் தகவல் தருகிறது.

அதே போல 3இடியட்ஸ் படத்தில் நடிக்க விஜய் ஒப்புகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டு விட்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்குகிறது.

வேலாயுதம் தொடக்கவிழாவில் 3இடியட்ஸ் படத்துக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறாராம் விஜய். தனது முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்ய எம்ஜி ரேட்டைக் குறைத்துக் கொள்ள விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக வேலாயுதம் படத்தின் தமிழக விநியோக உரிமையை முதல்பிரதி அடிப்படையில் விஜய் வாங்கியிருப்பதாகவும் தகவல் கிடைகிறது.

விஜய்யின் இந்த முடிவுகளால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சமாதானம் ஆகி இருப்பதாகவும் விஜய்க்கு எதிராக ரெட் கார்டு போடப்போவதில்லை என்றும் அறிவிக்க.

0 comments:

Post a Comment