விஜய் காட்டிய அன்பு மறக்கமுடியாது - அசின்
அசின் இலங்கை சென்று வந்த விவகாரத்தால் பல வில்லங்கங்களை சந்தித்து வந்த காவலன் படப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காயும் உடைக்கப் பட்டுவிட்டது. ‘அப்பாடா படம் முடிஞ்சுடுச்சு’ என இப்போதுதான் நிம்மதி அடைந்துள்ளாராம் அசின்.
அசினின் இலங்கைப் பயணம் காரணமாக அவருக்கு எதிராக, சென்ற இடமெல்லாம் கறுப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் என தொடர்ந்த பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.இதனால் தமிழ் நாட்டில் நடந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கேரளத்திற்கே சென்று படப்பிடிப்பை தொடர்ந்தது காவலன் படக்குழு.
ஆனால், அங்கும் அசினுக்கு எதிராக கறுப்புக்கொடி எதிர்ப்புகள் ஏற்படப்போவதாக தகவல்கள் பரவின. இப்படி தொடர்ந்து வந்த துரத்தல்களால் மிரண்டுபோனாராம்(?!) அசின்.
காவலன் படப்பிடிப்பு குறித்து பேட்டி அளித்த அசின், " என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்தான். சந்தோஷம், பதட்டம், பயம் என எல்லாமே கலந்த சூட்டிங் இது. ஒவ்வொருநாளும் எனக்கு திக் திக் என்றிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டால் போதும் என்றிருந்தது எனக்கு.
ஆனால், விஜய்யும் சித்திக்கும் ஆதரவளித்து என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டனர். அவர்கள் என்மேல் கட்டிய அன்பையும் அக்கறையையும் என்னால் மறக்க முடியாது," என்றார் அசின்.
0 comments:
Post a Comment