தனுஷ்




                      தனுஷின் ஆடுகளம்                  


பொல்லாதவன் வெற்றிக் கூட்டணியின் அடுத்தப் படைப்பு, ஆடுகளம். இயக்குனர், தயா‌ரிப்பாளர், ஹீரோ, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களில் எந்த மாற்றமுமில்லை. ஒரே மாற்றம் கதாநாயகி.

மதுரையை களமாகக் கொண்டு தயாராகியிருக்கிறது வெற்றிமாறனின் இரண்டாவது படம். தனுஷ் லோக்கல் இளைஞனாக வருகிறார். அவருக்கு ஆசானாக முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் ஈழக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்.

படத்தின் டாக்கி போர்ஷன் அனைத்தும் முடிந்த நிலையில் டப்பிங் பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன. பாடல் காட்சிகள் மற்றும் பேட்ச் வொர்க் முடிந்தால் ஆடுகளம் பூசணிக்காய் உடைக்க‌த் தயாராகிவிடும்.

அடுத்த வருடம் பொங்கலுக்குப் பின் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 




                       தனுஷுடன் நடிக்க தயார்-சிம்பு



                     

நடிகர் சிம்பு, கதை சரியாக அமைந்தால் தனுஷ் மட்டுமில்லை வேறு எந்த கதாநாயகனுடனும் சேர்ந்து நடிக்க தயார் என்று தெரிவித்தார்.
நடிகர் சிம்பு, பரத்துடன் இணைந்து ‘வானம்’ படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, சினேகா உல்லால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். தெலுங்கில் வெளியாக வெற்றி பெற்ற ‘வேதம்’ படத்தின் ரீமேக்தான் இந்த ‘வேதம்’. இதில் தெலுங்கில் ஏற்ற வேடத்திலேயே தமிழிலும் ஏற்று நடிக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை கிரீஸ் இயக்குகிறார்.
நடிகர் பரத்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து சிம்பு கூறியதாவது: “ஒரு படத்திற்கு கதை தான் ஹீரோ தவிர, அதில் யார் நடிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ‘வானம்’ படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கதை சரியாக அமைந்தால் தனுஷ் மற்றும் வேறு எந்த நடிகருடன் நடிக்க தயார். தயாரிப்பாளர் கதையை மட்டுமே நம்பினால் போதும். எனவே கதையைத் தேர்வு செய்வதில் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.