நடிகர் விஜய்யின் கோபம்:மிரண்டு போன ரசிகர்கள்!


பேசவே மாட்டாரா விஜய். வாயை திறந்து பேசினால் முத்தா உதிர்ந்துவிடும்- இப்படித்தான் பப்ளிக் பங்சனில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய்யை பற்றி இத்தனை நாளும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இனி அப்படி பேசமாட்டார்கள்.


எல்லா பங்சனிலும் அசடு வழிய நிற்கும் விஜய்யை பார்த்தே பழகிப்போனவங்க ரசிகர்கள் மீது ஆவேசப்படும் அந்தவீடியோவை பார்த்து ’நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்’னு சொல்கிறார்கள்.

பொது இடங்களில் தான் நடிகர் விஜய் பரமசாதுபோல் நடந்துகொண்டார் இத்தனை நாளும். ஆனால் உண்மையில் கடும் கோபக்காரர்.

அவ்வப்போது உடைபடும் அவர் வீட்டு கண்ணாடிகளுக்குத்தான் அது தெரியும்.

அந்த கோபத்தை இப்போது ரசிகர்களும் பார்த்துவிட்டார்கள்.

தற்போது, இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை கலக்கும் சமாச்சாரம் இந்த விஜய் வீடியோதான்.

பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.

சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்தை ஓட வைப்பதற்காக தமிழகம் முழுவதிலும் உள்ள லோக்கல் சேனல் நிருபர்களை சென்னைக்கு வரவழைத்து பேட்டி கொடுத்தார்கள் விஜய்யும், பிரபுதேவாவும்.

அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத
சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்தஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு,படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது.

விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா
மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

நம்ம தலைவரா இப்படி என்று மிரண்டுபோன ரசிகர்களின் நிலை வீடியோவில் பதிவாகவில்லை.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்

0 comments:

Post a Comment