டூரஜினியின் ராணா - பூஜை முடிந்து ஃபாரினில் யட்!




சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் பூஜை ஏப்ரல் 20-ம் தேதி நடந்தது. எந்திரனுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்டமான வரலாற்றுப் படம் ராணா. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் ரவிக்குமாரும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ராணாவின் கதை, திரைக்கதையை ரஜினியே எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஈராஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சௌந்தர்யா ரஜினியின் ஹரா பிக்ஸர்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்துக்கு டெக்னிகல் இயக்குநராகவும் சௌந்தர்யா ரஜினி பணியாற்றுகிறார்.

ரஜினிக்கு ராசியான ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ராணா பூஜை நடந்தது. அங்கேயே முதல் காட்சியும் படமாக்கப்பட்டது. ரஜினி – தீபிகா பங்கேற்கும் டூயட் பாடல் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குச் விரைவில் செல்கிறார்கள்.

இந்தப் படத்தில் மொத்தம் 7 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்களில் மூவர் ரஜினிக்கு ஜோடி. மற்றவர்களுக்கு முக்கிய வேடங்கள் தரப்பட உள்ளன.
விஜய் காட்டிய அன்பு மறக்கமுடியாது - அசின்





சின் இலங்கை சென்று வந்த விவகாரத்தால் பல வில்லங்கங்களை சந்தித்து வந்த காவலன் படப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காயும் உடைக்கப் பட்டுவிட்டது. ‘அப்பாடா படம் முடிஞ்சுடுச்சு’ என இப்போதுதான் நிம்மதி அடைந்துள்ளாராம் அசின்.


அசினின் இலங்கைப் பயணம் காரணமாக அவருக்கு எதிராக, சென்ற இடமெல்லாம் கறுப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் என தொடர்ந்த பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.இதனால் தமிழ் நாட்டில் நடந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கேரளத்திற்கே சென்று படப்பிடிப்பை தொடர்ந்தது காவலன் படக்குழு.

ஆனால், அங்கும் அசினுக்கு எதிராக கறுப்புக்கொடி எதிர்ப்புகள் ஏற்படப்போவதாக தகவல்கள் பரவின. இப்படி தொடர்ந்து வந்த துரத்தல்களால் மிரண்டுபோனாராம்(?!) அசின்.

காவலன் படப்பிடிப்பு குறித்து பேட்டி அளித்த அசின், " என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்தான். சந்தோஷம், பதட்டம், பயம் என எல்லாமே கலந்த சூட்டிங் இது. ஒவ்வொருநாளும் எனக்கு திக் திக் என்றிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டால் போதும் என்றிருந்தது எனக்கு.

ஆனால், விஜய்யும் சித்திக்கும் ஆதரவளித்து என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டனர். அவர்கள் என்மேல் கட்டிய அன்பையும் அக்கறையையும் என்னால் மறக்க முடியாது," என்றார் அசின்.

அசினுடன் விஜய் நெருக்கம்!








இலங்கை சென்று வந்ததால் தமிழர்களால் சபிக்கப்பட்டவர் அசின். இப்போது விஜய்யின் காவலன் படத்தில் தமிழர்களின் எதிர்ப்போடு நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அசினுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை கேட்டு வாங்கியது காவலன் படக்குழு. படபிடிப்பு தளத்தின் முன்பு பல தமிழ் இயக்கங்கள் போராட்டம் நடத்தியது தான் காரணம். என்ன வேடிக்கை!



இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் சித்திக். அவர் இது பற்றி பேசியதாவது, படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பது என் வேலை. மற்றதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொன்னார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தபோது, இலங்கை சம்மந்தமாக எதுவும் அசினிடம் கேட்க கூடாது என்று கட்டளையிட்டார்கள். மீறி இலங்கைப் பேச்சை எடுத்தும் அசின் விறு விறுவென வெளியேறினார். இப்படியெல்லாம் இருக்கிற நிலையில்...

காவலன் படத்தின் பாடல் காட்சி பூனேவின் அருகில் உள்ள லவாசா மலையில் எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் அசின் பயங்கர நெருக்கம் காட்டி இருக்கிறாராம். விஜய்யுடன் அசினுக்கு இது மூன்றாவது படம் என்பதால் புரிதல் அதிகமாய் இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறது சினிமா வட்டாரம்.

இருந்தாலும் பாடல் காட்சி ரொம்ப சூப்பரா வந்திருக்கு என்று சொல்கிறது படக்குழு. இந்தி பக்கம் போனதிலிருந்து அசின் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி வருகிறார் என்றும் இப்பொது சல்மான் கானுடன் நடிக்கும் ரெடி படத்திலும் சல்மானுடன் அசின் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதும் காத்து வழியாக கிடைத்த செய்தி. உண்மை என்னனு யாருக்கு தெரியும்!?

நடிகர் விஜய்யின் கோபம்:மிரண்டு போன ரசிகர்கள்!


பேசவே மாட்டாரா விஜய். வாயை திறந்து பேசினால் முத்தா உதிர்ந்துவிடும்- இப்படித்தான் பப்ளிக் பங்சனில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய்யை பற்றி இத்தனை நாளும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இனி அப்படி பேசமாட்டார்கள்.


எல்லா பங்சனிலும் அசடு வழிய நிற்கும் விஜய்யை பார்த்தே பழகிப்போனவங்க ரசிகர்கள் மீது ஆவேசப்படும் அந்தவீடியோவை பார்த்து ’நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்’னு சொல்கிறார்கள்.

பொது இடங்களில் தான் நடிகர் விஜய் பரமசாதுபோல் நடந்துகொண்டார் இத்தனை நாளும். ஆனால் உண்மையில் கடும் கோபக்காரர்.

அவ்வப்போது உடைபடும் அவர் வீட்டு கண்ணாடிகளுக்குத்தான் அது தெரியும்.

அந்த கோபத்தை இப்போது ரசிகர்களும் பார்த்துவிட்டார்கள்.

தற்போது, இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை கலக்கும் சமாச்சாரம் இந்த விஜய் வீடியோதான்.

பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.

சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்தை ஓட வைப்பதற்காக தமிழகம் முழுவதிலும் உள்ள லோக்கல் சேனல் நிருபர்களை சென்னைக்கு வரவழைத்து பேட்டி கொடுத்தார்கள் விஜய்யும், பிரபுதேவாவும்.

அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத
சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்தஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு,படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது.

விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா
மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

நம்ம தலைவரா இப்படி என்று மிரண்டுபோன ரசிகர்களின் நிலை வீடியோவில் பதிவாகவில்லை.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்

வேலாயுதம்


விஜயை கூட்டிட்டு போய் ஹிட்சாக் கிட்ட விட்டாலும் மசாலா படம்தான் எடுப்பார்னு எல்லோருக்குமே தெரியும் போல. 5 மசாலா ப்ளாப் கொடுத்தாலும் இவரோட மசாலா தாகம் இவரை விடுவது போல் இல்லை என்பதற்கு இதோ வேலாயுதம் கதையே சாட்சி.. இந்த கதையில அப்படியே விஜயை நினைச்சு பாருங்க சுறா விஜய்க்கும் இதுக்கும் வித்தியாசமே தெரியாது.


(விஜயின் வில்லேய் கெட்டப் இது)

நகரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது.

கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் வரும் போது சிட்பண்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க சிட்டிக்கு வருகிறார். அங்கே வில்லன் அங்கங்கே பாம் வைத்து கலவரத்தை தூண்டுகிறான். இந்த சதிச்செயலை செய்வது யார் என்று கண்டுபிடிப்பதில் திணறுகிறது போலீஸ்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.

இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று அவர் சொல்ல, அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்…வேலாயுதம்…என்று பிரமிக்கிறார்கள். வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார். இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.

கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா. இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.

ஊருக்குப்போகும் முடிவில் பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்றுகிறது. தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என்று கொதிக்கிறார் விஜய். அப்புறமென்ன…ஜெனிலியா விரும்பும் வேலாயுதமாக மாறுகிறார். இதனால் வில்லன் வேலாயுதத்தை பலிவாங்க துடிக்கிறார். இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது. சமயம் பார்த்து வேலாயுதத்தை பலிவாங்கத்துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார். இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.



(வெறிகொண்ட வேங்கையா கெளம்பின விஜய் கெட்டப்)

வில்லன் முஸ்லீம். ஆனால் வேதம் ஓதும் இந்து வேடத்தில் இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபடுவதை மக்களுக்கு அம்பலப்படுத்தி வில்லனை பலிவாங்குகிறார் வேலாயுதம்.

ஜெனிலியாவை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரின் அத்தை மகளான ஹன்சிகாவைத்தான் கடைசியில் திருமணம் செய்துகொள்வார்.

என்ன லுக்கு, என்னடா படம் வர்றதுக்கு முன்னாடியே கதை சொல்றோமேன்னா?? அதென்ன பெரிய விசயம் பத்து வருஷத்துக்கு முன்னாடி தெலுங்குல ஹிட்டான ஆசாத் படம் தான் விஜயின் வேலாயுதம்னு ஏற்கனவே ரீமேக் கிங் ” ராஜா” ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டார் நாங்க அந்த படத்துக்கு கதை என்னனு கண்டு பிடிச்சோம்.