விக்ரமின் அடுத்தப்படம் ‘தெய்வ மகன்’

ravanan

தவம் இருந்ததைப் போல விக்ரம் நடித்த ‘ராவணன்’ படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால். இனி ஆண்டுகளை பிடிக்கும் படங்களை விட மாதக்கணக்கில் முடிக்கும் கமர்ஷியல் படங்களில் நடிப்பதே சரி, என்ற முடிவுக்கு வந்த விக்ரம், பூபதி பாண்டியன், செல்வராகவன் என இரண்டு இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்தார். பிறகு இரண்டு படங்களிலும் ஏகப்பட குழப்பங்கள் நிலவ விக்ரமின் அடுத்தப்படம் என்ன என்பதில் கோடம்பாக்கமே விக்ரமுடன் சேர்ந்து குழம்பிக்கொண்டிருந்தது.

குழம்பியவர்கள் தெளிவாக வந்திருக்கிறது விக்ரமின் புதுப்பட தகவல். ‘தெய்வ மகன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘மதராஸப்பட்டினம்’ படத்தின் இயக்குநர் விஜய் இயக்குகிறார். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளி பண்டிகைக்குப் பிறகு ஊட்டியில் துவங்க இருக்கிறதாம்


0 comments:

Post a Comment