ஏழை மாணவரை தத்‌தெடுத்தார் விஜய்!


டீக்கடையில் வேலை பார்த்தபடியே படித்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது விஜய் இதனை அறிவித்தார். நடிகர் விஜய் நேற்று (22ம்தேதி) தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாமில் கலந்து கொண்டார். இதில் விஜய் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க ம‌ோதிரம் அணிவித்தார். சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சீரூடை வழங்கப்பட்டது. சாலிகிராமம் காவேரி பள்ளியில் ஏழை மக்களுக்கும், சின்மயா நகர் முதியோர் இல்லத்திலும் அன்னதானம் வழங்கினார்.

பின்னர் டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே பிளஸ் டூ படித்து, தேர்வில் அதிக மார்க் எடுத்த பாண்டியராஜ் என்ற ஏழை மாணவரை விஜய் தத்தெடுத்தார். அந்த மாணவர் விருப்பப்படி அவரை என்ஜினீயரிங் படிக்க வைக்கப் போவதாக விஜய் அறிவித்தார். தனது சமூக பணிகள் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்த விஜய், சென்னை நகர் முழுவதும் வலம் வந்து சமூக நல உதவிகளை செய்து பலரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக டைரக்டர்கள் லிங்குசாமி, ஜெயம் ராஜா, பேரரசு, செல்வபாரதி, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏவி.எம்.பாலசுப்பிரமணியம், ரமேஷ், சங்கிலிமுருகன் உள்ளிட்டோர் நேரில் வந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் தலைமை நற்பணி இயக்க தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்


0 comments:

Post a Comment