
வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றிய விஜய்யின் மகன் சஞ்சய், அடுத்து காவல்காரன் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறாராம்.
சித்திக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், விஜய்யின் மகனாகவே வரும் சஞ்சய், பாடல் காட்சியிலும், சில முக்கியமான காட்சிகளிலும் நடிக்கிறாராம்



நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார் அசின். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின். மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் உருவான பாடிகார்ட் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.